புதுக்கோட்டை மாவட்ட அதிமுக பிரமுகர் கார் மோதி உயிரிழப்பு

Pudukkottai ADMK leader dies in car crash

புதுக்கோட்டை, டிசம்பர் 01:

புதுக்கோட்டை மாவட்ட அதிமுக பொருளாளர் வி.சி. ராமையா இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, கார் மோதி உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்ட அதிமுக பொருளாளராக இருந்தவர் வி.சி. ராமையா (68). அதிமுக மாவட்டச் செயலர், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் போன்ற பொறுப்புகளையும் வகித்தவர்.

தனது சொந்த ஊரான வாண்டாக்கோட்டையில் வசித்து வந்த வி.சி. ராமையா, இன்று காலை தோட்டத்துக்குச் செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, திருவரங்குளம் சாலையில் கார் மோதியதில் படுகாயமடைந்தார்.

பின்னர் அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல், உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு எடுத்துக்கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலும் இந்த விபத்துக் குறித்து வாண்டாக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

NDA கூட்டணியில் ராமதாசை சேர்க்க 3 நிபந்தனைகள் விதித்த அன்புமணி

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை

கட்சி நிர்வாகிகளுடன் ராமதாஸ் முக்கிய ஆலோசனை!