புதுச்சேரி, ஜூலை 10:
புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சர் ஆகியோருக்கு இடையேயான கருத்து வேறுபாடு காரணமாக மக்கள் நலத்திட்டங்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி, சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி
இடையேயான கருத்து வேறுபாடுகள் காரணமாக அரசு செயல்பாடுகள் பாதிக்கப்படுவதாகவும், இதனால் பொதுமக்கள் நலத்திட்டங்கள் பாதிக்கப்படுவதாகவும் நேரு தெரிவித்தார்.
இதனையடுத்து, புதுச்சேரி சட்டசபை நுழைவாயிலில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். இதனையடுத்து மாலையில் சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம் மற்றும் என்.ஆர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் நேருவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பழச்சாறு கொடுத்து போராட்டத்தை நிறுத்தி வைத்தனர். மேலும் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு, தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.