மகாத்மா காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் மரியாதை

President pays respects to Mahatma Gandhi memorial.

டெல்லி, ஜனவரி 30:

மகாத்மா காந்தியின் 79-வது நினைவுநாளையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவரைத்தொடர்ந்து துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அவரை தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவு நாளில் அவருக்கு எனது நூறு மடங்கு வணக்கங்கள். மதிப்பிற்குரிய பாபு எப்போதும் சுதேசிக்கு வலுவான முக்கியத்துவம் அளித்தார். இது வளர்ந்த மற்றும் தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவிற்கான நமது உறுதிப்பாட்டின் அடிப்படைத் தூணாகும். அவரது ஆளுமையும் செயல்களும் நாட்டு மக்களை கடமையின் பாதையில் நடக்க என்றென்றும் ஊக்குவிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Related posts

தஞ்சாவூரில் தவெக தலைவர் பங்கேற்க உள்ள கூட்டத்திற்கு போலீசார் அனுமதி

ஈபிஎஸ்வுடன் தொகுதி பங்கீடு பேச்சு: தென்மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக

டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி!