சென்னையில் உள்ள சிட்டி யூனியன் வங்கியின் 120-வது ஆண்டு விழாவில் ஜனாதிபதி பங்கேற்பு

President participate City Union Bank celebration in Chennai

சென்னை, ஆகஸ்ட் 02 :

இந்தியாவின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சென்னையில் நடைபெறும் சிட்டி யூனியன் வங்கியின் 120-வது நிறுவன தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

கர்நாடக மாநிலம் மைசூரில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட திரௌபதி முர்மு, அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு இன்று காலை வருகை தந்தார். சென்னை விமான நிலையத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து, சென்னை நந்தம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற வங்கி விழாவில் முர்மு தெரிவித்த பேச்சு வங்கியின் வளர்ச்சி மற்றும் சமூகப் பொறுப்புக்கான செயல் முனைவுகளைக் கொண்டது. விழாவில் தமிழக ஆளுநர், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக  சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சசர் கீதா ஜீவன் போன்றோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்சிக்கு பின், திரௌபதி முர்மு சென்னை ஆளுநர் மாளிகையில் இரவு ஓய்வெடுத்து, புதன்கிழமை காலை தனி விமானம் மூலம் திருச்சி செல்கிறார். திருச்சியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

இத்தொடர்பாக சென்னை, திருச்சி மற்றும் திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காவல்துறையினர் பல அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

தேர்தலில் ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல..வெறும் 0 தான்: ஈபிஎஸ் விமர்சனம்

எச். ராஜாவைச் சந்தித்து நலம் விசாரித்த ஈபிஎஸ்!

முதியோருக்கு மாதம் ரூ.2,000; அதிமுக 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு!