செப்.2-ல் தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

President Murmu to visit TN on September 2

சென்னை, ஆகஸ்ட் 26:

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க இரண்டு நாள் முறைப் பயணமாக வரும் செப்டம்பர் 2-ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு வருகிறார்.

செப்டம்பர் 3-ம் தேதி திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டம் வழங்க உள்ளார்.

பின்னர் திருச்சி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்யவும் திட்டமிட்டுள்ளார்.

குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி, அனைத்து இடங்களிலும் மாநில-மத்திய பாதுகாப்புப் படைகள் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

NDA கூட்டணியில் ராமதாசை சேர்க்க 3 நிபந்தனைகள் விதித்த அன்புமணி

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை

கட்சி நிர்வாகிகளுடன் ராமதாஸ் முக்கிய ஆலோசனை!