ஒழுகும் வீட்டில் அப்பா இருப்பாரே என்ற கவலை பிரேமாவுக்கு இனி வேண்டாம்!- மு.க.ஸ்டாலின்

Avinashi flyover named G.D. Naidu: cm announce

சென்னை, செப்டம்பர் 26:

ஜவகர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் என பலர் கலந்துக் கொண்டனர்.

இந்த விழாவில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பயனாளி மாணவி பிரேமா தனது முதல் மாத சம்பளத்தை தந்தையிடம் வழங்கி உரையாற்றினார். அப்போது பிரேமா கூறியது, தந்தை ஒழுகும் வீட்டில் இருப்பதாக கூறியிருந்தார். இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பிரேமாவுக்கு வீடு வழங்க உத்தரவிட்டார்.

இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் அவர் கூறியதாவது, ஒழுகும் வீட்டில் அப்பா இருப்பாரே என்ற கவலை பிரேமாவுக்கு இனி வேண்டாம்! எத்தனையோ பேரின் எதிர்ப்பையும் மீறி உங்களைப் படிக்க வைத்த தந்தையிடம், முதல் மாதச் சம்பளத்தைத் தந்து நீங்கள் மகிழ்ச்சி அடைந்தீர்கள்!

உங்கள் கனவை நிறைவேற்றிய தந்தைக்குக் ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின்கீழ் புதிய வீடு கட்டிக் கொடுப்பதற்கான ஆணையை வழங்கி நான் மகிழ்ச்சி கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Related posts

NDA கூட்டணியில் ராமதாசை சேர்க்க 3 நிபந்தனைகள் விதித்த அன்புமணி

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை

கட்சி நிர்வாகிகளுடன் ராமதாஸ் முக்கிய ஆலோசனை!