தலைமைச் செயலகத்தில் பொங்கல் விழா – முதலமைச்சர் பங்கேற்பு!

Pongal celebrations at the Secretariat - CM stalin participates!

சென்னை, ஜனவரி 14:

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டுள்ளார்.

பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அரசு அலுவலகங்களில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்று வரும் நிலையில் இன்று(ஜன. 14) சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் ஐஏஎஸ் அதிகாரிகளும் அரசு ஊழியர்களும் பாரம்பரிய வேட்டி, சட்டை அணிந்து பங்கேற்றனர்.

பொங்கல் வைத்து கொண்டாடிய நிலையில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் அனைவருக்கும் பொங்கல் வழங்கினர். அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டனர்.

Related posts

நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!

NDA கூட்டணியில் ராமதாசை சேர்க்க 3 நிபந்தனைகள் விதித்த அன்புமணி

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை