காவலர்கள் தபால் வாக்குப்பதிவு செய்யும் தேதி மாற்றம்

தமிழ்நாடு, ஏப்ரல் 11:

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், காவலர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடுவோர் தபால் வாக்கு செலுத்த, வாக்குப்பதிவுக்கு முந்தைய 3 நாட்கள் வாக்குப் பதிவு மையங்கள் (PVC) செயல்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது வாக்கெடுப்பு நடைபெறும் தேதிக்கு 3 நாட்களுக்கு முன்பே முடிவடைய வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காவலர்கள் தபால் வாக்குப்பதிவு செய்யும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் 18 மற்றும் 20ம் தேதிகளில் காவலர்கள் தபால் வாக்குகளை பதிவு செய்யலம் என சென்னை காவல்துறை சுற்றிறிக்கை விடுத்துள்ளது.

சென்னை, வெளிமாவட்டங்களில் பணியாற்றும் காவலர்களுக்கு இதுவரை 18,000 தபால் வாக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

RELATED NEWS

Latest News