கரூர், செப்டம்பர் 26:
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.இந்நிலையில் நாளை அவர் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.
கரூரில் பிரசாரம் நடத்துவதற்கான இடங்களை தேர்வு செய்து காவல்துறையிடம் அனுமதி பெற, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் கரூருக்கு வருகை தந்தார். காவல்துறை மாவட்ட சூப்பிரண்டு ஜோஸ் தங்கையாவை சந்தித்து, லைட் ரோஸ் கார்னர் மற்றும் கரூர் உழவர் சந்தை ஆகிய இடங்களுக்கான பிரசார அனுமதியை மனுவில் கேட்டுள்ளனர்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தினர் முன்மொழிந்த மூன்று இடங்களுக்கும் காவல்துறையால் அனுமதி வழங்கப்படவில்லை. இதற்கு மாற்றாக, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்த ஈரோடு ரோடு வேலுசாமிபுரம் பகுதியில் போலீசாரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விழாவுக்கு பிறகு, நாமக்கல் பிரசாரத்தை முடித்த விஜய், காரில் பரமத்திவேலூர் மற்றும் திருக்காம்புலியூர் வழியாக கரூருக்கு வந்து பிற்பகல் 3 மணிக்கு பிரசாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.