நாகையில் தவெக தலைவர் விஜயின் பிரசாரத்திற்கு போலீஸ் அனுமதி மறுப்பு

Police deny permission for Tvk Vijay campaign in nagapatinam

நாகை, செப்டம்பர் 13:

2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வரை இன்னும் 7 மாதங்கள் உள்ள நிலையில் பல அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது முதல் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை இன்று திருச்சியில் தொடங்கி, தனது கொள்கை மற்றும் அரசியல் நிலைப்பாடுகளை விக்கிரவாண்டி மற்றும் மதுரையில் வெற்றிகரமாக விளக்கியுள்ளார். இதில் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டு, தமிழக அரசியலில் விஜய்க்கு உள்ள தனித்துவ சக்தியை நிரூபித்தனர்.

இதனையடுத்து இன்று சென்னையிலிருந்து தனி விமானத்தில் வந்த விஜய்க்கு திருச்சி விமான நிலையத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.விஜய், பிரத்யேக தேர்தல் பிரசார வாகனத்தில் பெரம்பலூர் மற்றும் அரியலூர் பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டவர்.

ஆனால், நாகை மாவட்டம் அவுரித்திடலில் நடைபெறவிருக்கும் த.வெ.க. தலைவர் விஜயின் பிரசார நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதற்கான காரணமாக அந்நாளில் நாகையில் திமுக கட்சியினர் ஏற்கனவே ஒரு கூட்டத்திற்கு முன்னதாக பதிவு செய்துள்ளதால், இட ஒதுக்கீடு காரணமாக அனுமதி மறுக்கப்பட்டது.

மேலும், மாற்று இடமாக பரிந்துரைக்கப்பட்ட நாகை அபிராமி சன்னதி வாசல், புத்தூர் ரவுண்டானா மற்றும் காடாம்பாடி ஐடிஐ வளாகங்களிலும் தேவையான இட வசதி இல்லாத காரணத்தால் போலீசார் அனுமதி வழங்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

Related posts

தேர்தலில் ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல..வெறும் 0 தான்: ஈபிஎஸ் விமர்சனம்

எச். ராஜாவைச் சந்தித்து நலம் விசாரித்த ஈபிஎஸ்!

முதியோருக்கு மாதம் ரூ.2,000; அதிமுக 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு!