கோவை, ஆகஸ்ட் 07:
யூடியூப் தளத்தில் நகைச்சுவை வீடியோக்களில் பிரபலமான கோபி, சுதாகர் ஆகியோரின் “பரிதாபங்கள்” சேனலுக்கு எதிராக கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் தனுஷ்கோடி புகார் அளித்துள்ளார்.
அண்மையில் “சொசைட்டி பாவங்கள்” என்ற பரிதாபங்கள் சேனலில் வெளியான வீடியோ சமூகத்தில் பரவியது. இதில், நெல்லை கவின் ஆணவக் கொலை சம்பவத்தின் பின்னணியில் சாதிவெறிக்கு எதிரான சமூக கருத்துக்களை நகைச்சுவை முறையில் பரப்பியது அனைவரையும் ஈர்த்தது வருகிறது.
இந்த வீடியோவை சமூக அங்கீகார மறுக்கக்கூடிய விதமாக, சமூகத்தினருக்கு இடையே பிரச்சினையை உருவாக்கும் வகையில் உள்ளது எனவும், சமூகத்தை இழிவுபடுத்தும் கருத்துக்கள் உள்ளதாகவும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, யூடியூப் தளத்தில் இருந்து அந்த வீடியோவை நீக்கி, “பரிதாபங்கள்” சேனலை தடை செய்ய வேண்டுமென்றும் கோரப்பட்டுள்ளது.
இந்த புகார் முன்வைத்து சமூக வலைதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியவுள்ளது. தற்போது, இந்த வழக்கு தொடர்பான போலீசாரின் விசாரணை மேற்கொள்ளவும், சமூக அமைதியை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.