சென்னை, ஆகஸ்ட் 14:
சென்னை ரிப்பன் மாளிகை அருகே 13 நாட்களுக்கு மேலாக தங்கள் உரிமைகளுக்காக போராடி வருகின்ற தூய்மைப் பணியாளர்களை போலீசார் கடந்த நள்ளிரவில் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சி 5, 6 மண்டலங்களில் தூய்மைப்பணியை தனியார் நிறுவனத்துக்கு ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து, ரிப்பன் மாளிகை முன்பு 13 நாட்களாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளர்.
அரசு போராட்டக்காரர்களை அங்கிருந்து கலைத்து விடுமாறு எச்சரித்ததும், அவர்கள் கலைக்க மறுத்ததால், அவர்களை நேற்று நள்ளிரவு போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று பலரை கைது செய்தனர். இதில் பெண்கள் மற்றும் பலர் மயக்கம் அடைந்தனர். இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு நடைபெற்றது.
இந்த சம்பவத்தையடுத்து, மாநகர காவல் ஆணையர் அருண் ரிப்பன் மாளிகை பகுதியில் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருவதாகவும், சென்னை மாநகராட்சி முழுவதும் காவல் துறையினர் செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கைது நடவடிக்கைக்கு விசிக, தவெக, அதிமுக உள்ளிட்ட பல கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்