சென்னை, ஆகஸ்ட் 30:
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று கட்சித் தலைமையகத்தில், அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிகளவான ஆலோசனைகளோடு, தேர்தல் பணிகளை வேகப்படுத்தும் உத்தரவுகள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில் பேசிய அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக கூட்டணியில் பாமக கட்டாயமாக சேருமென எடப்பாடி பழனிசாமி உறுதி தெரிவித்தார். பாமகவில் உள்ள டாக்டர் ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையேயான குடும்ப மோதல் விரைவில் தீரும், அதற்குப்பின் 2026 சட்டமன்ற தேர்தலில் பாமக, அதிமுக கூட்டணியில் இணைந்து இருப்பார்கள் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், அதிமுக கூட்டணியை வலுப்படுத்தும் நோக்கில், உங்கள் பகுதிகளில் உள்ள சிறிய கட்சிகளை அதிமுக உடனடியாக இணைக்க வேண்டும் என்றும் நிர்வாகிகளை அறிவுறுத்தியுள்ளார். இந்த முயற்சிகளின் மூலம் 2026-ம் ஆண்டை நோக்கி அதிமுக கூட்டணியின் வலிமை மேலும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.