சென்னை, செப்டம்பர் 10:
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக திடீர் மோதல்கள் தொடர்கின்றன. இந்நிலையில், கட்சியின் பெயர் மற்றும் மாம்பழம் சின்னத்தின் உரிமை தொடர்பாக ராமதாஸ் தரப்பில் கேவியட் மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணிக்கு இடையே கடந்த சில மாதங்களாக மோதல் நிலவி வருகின்றது. இருவரும் மாறிமாறி ஊடகங்கள் மற்றும் கூட்டங்கள் வாயிலாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.கட்சியின் நிறுவனரான தானே தலைவராக செயல்படப் போவதாக ராமதாஸும், பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட தானே தலைவராக தொடர்வதாக அன்புமணியும் அறிவித்துள்ளனர்.
இதையொட்டி, கட்சியின் பழைய நிர்வாகிகளை நீக்கி, புதிய நிர்வாகிகளை இருவரும் தனித்தனியாக நியமித்து பரஸ்பரம் அறிக்கைகள் வெளியிட்டு வருவதாகவும் அறியப்படுகின்றது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் மிக விரைவில் நடைபெற இருக்குது. அந்த சூழ்நிலையில் பாமக கூட்டணி மற்றும் வேட்பாளர்களை யார் அறிவிப்பது, கட்சிப் பெயர் மற்றும் சின்ன உரிமை குறித்து ஏற்பட்ட சிக்கல்கள் அதிகரித்து உள்ளன.
ராமதாஸ் நியமித்த கட்சியின் பொதுச் செயலாளர் முரளி சங்கர், அன்புமணி தரப்பினர் கட்சியின் பெயருக்கோ, மாம்பழம் சின்னத்துக்கோ உரிமை கோரினால், தங்கள் தரப்பை கேட்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்துள்ளார்.