44
சென்னை, ஜூலை 25:
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், முன்னணி அரசியல் தலைவரும் ஆன டாக்டர் ராமதாஸ் இன்று தனது 87வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், அவரது ரசிகர்கள் என பலர் சமூக வலைதளங்களில் மற்றும் நேரில் சிறப்புவாழ்த்துகளை தெரிவித்த வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (முன்பு ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துஉரையில், ” பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் அய்யா ராமதாஸ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! நீண்ட ஆயுளோடு, தங்களது பொதுவாழ்க்கைப் பயணம் தொடர வேண்டுமென விழைகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.