பா.ம.க. வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் அன்புமணி

சென்னை, மார்ச் 30:

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 23-ம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க. 27, பா.ம.க. 18, அ.ம.மு.க. 11, த.மா.கா. 5, இந்திய ஜனநாயக கட்சி 2, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம் தலா ஒரு இடத்திலும் களம் காண்கிறது. கூட்டணி கட்சிகளுக்கு 65 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது போக, 169 தொகுதிகளில் அ.தி.மு.க. களம் காண்கிறது. அ.தி.மு.க. கூட்டணியில் 18 இடங்களில் பா.ம.க. போட்டியிடுகிறது. முதல்கட்டமாக 3 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டது. அதன்படி, கீழ்வேளூர் – ச.வடிவேல் ராவணன், அம்பத்தூர் – கே.என்.சேகர், செஞ்சி – அ.கணேஷ் குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் 15 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டார். பெரம்பூர் – திலகபாமா, தருமபுரி – சவுமியா அன்புமணி, விருத்தாசலம் – தமிழரசி, சேலம் மேற்கு – கார்த்திகா, பென்னாகரத்தில் பாடி வெ.செல்வம், போளூர் – பாஸ்கரன், திருப்போரூர் – பாலு, ஜெயங்கொண்டம் – வைத்தி, சேலம் வடக்கு – சதாசிவம், விக்கிரவாண்டி-சிவக்குமார், சோளிங்கர் – சரவணன், மயிலாடுதுறை – சித்தமல்லி, உத்திரமேரூர் – மகேஷ்குமார், ரிஷிவந்தியம் – செழியன், காட்டுமன்னார்கோவில் தனித்தொகுதியில் அன்பு.சோழன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

RELATED NEWS

Latest News