பிரதமர் மோடி நாளை மதுரை வருகை: ஏற்பாடுகள் தீவிரம்!

PM Modi visit Madurai tomorrow: Preparations in full swing!

சென்னை, பிப்ரவரி 28:

மதுரையில் மார்ச் 1-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதால் நிகழ்ச்சிக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

புதுச்சேரியில் மார்ச் 1 ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியை முடித்துவிட்டு மாலை 3 மணிக்கு மேல் மதுரை வரும் பிரதமர் நரேந்திர மோடி‌, மதுரை விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

அதில் தமிழ்நாடு – கேரளா இணைக்கும் திருமங்கலம் -கொல்லம் தேசிய நெடுஞ்சாலை ஒரு பகுதியை மக்கள் பயன்பாட்டிற்குப் பிரதமர் திறந்து வைக்கிறார். மேலும் மதுரை விமான நிலைய விரிவாக்கத்தின் ஒரு பகுதியான வான் கட்டுப்பாட்டு அறை கட்டடத்தையும் திறந்து வைப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

அதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய இருப்பதாகவும், அதனை தொடர்ந்து மதுரை மண்டேலா நகர்ப் பகுதியில் 150 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார் எனத் தெரிகிறது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அமமுக டிடிவி தினகரன், பாமக அன்புமணி ராமதாஸ், ஜி கே வாசன் ஐ ஜே கே நிறுவனர் பாரிவேந்தர், ஜான்பாண்டி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்க உள்ளனர்.

மதுரை மண்டையில் நகர்ப் பகுதியில் பிரதமர் பங்கேற்கும் தேசிய ஜனநாயக பொதுக்கூட்டத்தில் ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது தமிழகக் காவல்துறை சார்பாக வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் ஐந்து மாவட்ட குழுவினரை வரவழைக்கப்பட்டு மோப்பநாய் கொண்டு தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மாநாடு நாளை நடைபெறவுள்ள நிலையில் விழா மேடை பொதுமக்கள் அமரும் பகுதி, பொதுமக்கள் அமரும் நாற்காலிகளும் திடலுக்குக் கொண்டு வரப்பட்டு பணிகள் அனைத்தும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Related posts

ஈபிஎஸ்வுடன் தொகுதி பங்கீடு பேச்சு: தென்மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக

டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி!

மதுரைக்கு வந்த பிரதமர் பொய்யை அவிழ்த்துவிட்டிருக்கிறார்: மு.க.ஸ்டாலின்