டெல்லி, செப்டம்பர் 08:
குடியரசு துணைத் தலைவர் தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிகளுடன் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நாளை குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடக்கவுள்ளது. இதனையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன், இந்தியா கூட்டணியின் வேட்பாளராக சுதர்சன் ரெட்டி போட்டியிட உள்ளனர்.
இதனையொட்டி, பாஜக எம்.பி.க்களுக்கான இரண்டு நாள் கூட்டம் கடந்த நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் பாஜகவின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். இதனையடுத்து இன்று மாலை நடக்கும் கூட்டத்தில் பிரதமர் மோடி பாஜக அரசின் சாதனைகள் குறித்து கூட்டத்தில் உரையாற்றவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இதில், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பு முறைகள் குறித்து ஆலோசனைகள் நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.