கோவை, நவம்பர் 19:
கோவை மாவட்டம் கொடிசியாவில் நடைபெறும் இயற்கை வேளாண் மாநாட்டை துவக்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கோவை வந்தடைந்தார்.
ஆந்திரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, விமானப்படைக்கு சொந்தமான தனி விமானம் மூலம் மோடி கோவை வந்தார். ஆந்திர மாநிலம், புட்டபர்த்தியிலிருந்து இன்று நண்பகல் 12.30 மணிக்கு புறப்பட்ட அவர், கோவை விமான நிலையத்தில் 1.25 மணிக்கு இறங்கினார்.
அங்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் சாமிநாதன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பிரதமரை வரவேற்றனர்.
கார் மூலம் கொடிசியா வளாகத்துக்கு செல்லும் பிரதமருக்குக் சாலையின் இருபுறங்களிலும் மலர்தூவி உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. மேலும் கலை நிகழ்ச்சிகளும் ஆரம்பிக்கப்பட்டது.
கோவை கொடிசியா வளாகத்தில் நவம்பர் 19 முதல் 3 நாட்கள் நடைபெறும் வேளாண்மை மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
தமிழகம், புதுச்சேரி, கேரளம், கா்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், இயற்கை வேளாண் விஞ்ஞானிகள், இயற்கை வேளாண் பொருள்கள் விநியோகிப்போர், விற்பனையாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.