பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி!

Permission granted for Poonamalli - Vadapalani Metro Rail service!

சென்னை, பிப்ரவரி 28:

வடபழனி – பூந்தமல்லி இடையேயான மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் வடபழனி – பூந்தமல்லி இடையேயான மெட்ரோ ரயில் சேவைக்கு பாதுகாப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டு, அனுமதி அளிக்கப்பட்டது.

ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மதுகா் சௌத்ரியின் 4 நாள்கள் ஆய்வையடுத்து, அனுமதி வ்ழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங் தொழில்நுட்பம், தண்டவாளத்தின் தரம், ரயில் பெட்டிகளின் வசதி, பாதுகாப்பு குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

முதற்கட்டமாக, பூந்தமல்லி – வடபழனி இடையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ சேவை இயக்கப்படுகிறது.

சென்னையில் முதற்கட்டமாக சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் மீனம்பாக்கம் விமானம் நிலையம் வரை இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கம் இரு வழிகளில் இயக்கப்பட்டு வருகிறது.

இரண்டாம் கட்டமாக மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் 4 -ஆவது வழித்தடமாக மெரீனா கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை தண்டவாளம், ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு, அனுமதியும் பெறப்பட்டது.

அந்த வழித்தடத்தில் வடபழனி முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 14. 64 கி.மீ. தொலைவுக்கான தண்டவாளப் பணிகள், ரயில் நிலையப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

Related posts

ஈபிஎஸ்வுடன் தொகுதி பங்கீடு பேச்சு: தென்மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக

டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி!

மதுரைக்கு வந்த பிரதமர் பொய்யை அவிழ்த்துவிட்டிருக்கிறார்: மு.க.ஸ்டாலின்