பெரியார் நினைவுநாள் : தவெக தலைவர் விஜய் மலர்தூவி மரியாதை

Periyar death anniversary: ​​Tvk Vijay pays tributes

சென்னை, டிசம்பர் 24:

தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், சமூக நீதியின் முன்னோடி, சமூகத்தில் புரையோடிப்போயிருந்த மூட நம்பிக்கைகளையும், ஏற்றத் தாழ்வுகளையும் தகர்த்தெறியப் போராடிய பகுத்தறிவுப் போராளி, எமது கொள்கைத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளில், அவரின் திருவுருவப் படத்திற்கு எமது அலுவலகத்தில் மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினேன்.

தந்தை பெரியார் அவர்கள் காட்டிய சமத்துவப் பாதையில் பயணித்து, சமூக நீதியை வென்றெடுக்க உறுதியேற்போம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!

NDA கூட்டணியில் ராமதாசை சேர்க்க 3 நிபந்தனைகள் விதித்த அன்புமணி

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை