பசும்பொன் விழாவில் ஒரே காரில் பயணித்த ஓபிஎஸ் – செங்கோட்டையன்

OPS in one car at Pasumpon festival – Sengottaiyan

ராமநாதபுரம், அக்டோபர்:

விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொனில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இன்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிகழ்வில் அதிமுக முன்னாள் தலைவர்கள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் இருவரும் ஒரே காரில் பயணம் செய்ததாகும். இருவரும் மதுரையிலிருந்து பசும்பொனுக்கு ஒரே வாகனத்தில் வந்துள்ளனர் என்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனும் இருவருடன் இணைந்து வருவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மூவரும் பசும்பொன் நிகழ்வுக்குப் பிறகு சசிகலாவை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கின்றன.

அதிமுக ஒற்றுமை அவசியம் என வலியுறுத்திவரும் செங்கோட்டையனின் கருத்தை ஓ.பன்னீர்செல்வமும் முன்பு ஆதரித்திருந்தார். இதுகுறித்து செங்கோட்டையனை விரைவில் சந்திப்பேன் என கூறியிருந்தார் ஓ.பி.எஸ்., இந்தச் சந்திப்பு தற்போது நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி மீது அதிருப்தியால் செங்கோட்டையன் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். அதேபோல, டி.டி.வி. தினகரனும் எடப்பாடி பழனிசாமி மீது வெகுநாளாக அதிருப்தி கொண்டுள்ளார்.

இந்த மூன்று முக்கிய அதிமுக பிரிவினர் ஒரே நேரத்தில் இணைவதற்கான சாத்தியம் உருவாகி வருவது, தமிழக அரசியலில் புதிய மாற்றத்துக்கான வழியாக கருதப்படுகிறது.

Related posts

தேர்தலில் ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல..வெறும் 0 தான்: ஈபிஎஸ் விமர்சனம்

எச். ராஜாவைச் சந்தித்து நலம் விசாரித்த ஈபிஎஸ்!

முதியோருக்கு மாதம் ரூ.2,000; அதிமுக 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு!