சீனாவில் பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான OPPO நிறுவனம், புதிய K13 Turbo சீரீஸ் ஸ்மார்ட்போன்களை வரும் 21-ந் தேதி சீனாவில் அறிமுகமாக இருப்பதாக ஒப்போ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளது. அதிகாரப்பூர்வமாக சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளது. இதன் விளம்பர வீடியோவில், ப்ரைமரி கேமராவின் கீழ் RGB விளக்குகள் கொண்ட கூலிங் ஃபேன் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இது, ஸ்மார்ட்போனின் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது, PLE110 என்ற மாடல் எண்ணுடன் கீக்பென்ச் தளத்தில் பதியப்பட்டுள்ள ஸ்மார்ட்போன், K13 Turbo சீரிஸில் ஒன்றாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. அந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ், 16GB RAM, ARM ARMv8 ஆக்டா கோர் SoC போன்ற தொழில்நுட்ப அம்சங்களோடு, சிங்கிள்-கோர் செயல்திறன் 2176 மற்றும் மல்டிகோர் செயல்திறன் 6618 என உயர்நிலை மதிப்பெண்களையும் பெற்றுள்ளது.
தற்போதுள்ள தகவல்படி,OPPO K13 Turbo தொடரில் வரும் வேரியண்ட்களில், பொதுவாக K13 Turbo மாடல் மீடியாடெக் டிமென்சிட்டி 8450 பிராசஸர் கொண்டு வரும் என குறிப்பிடப்படுகிறது. அதே நேரத்தில் ப்ரோ வேரியண்ட் ஸ்னாப்டிராகன் 8s Gen 4 சிப்செட் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு மாடல்களிலும் 50 மெகா பிக்சல் பிரைமரி கேமரா மற்றும் 2 மெகா பிக்சல் சென்சார் கொண்ட இரட்டை பின்புற கேமரா பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கத்தில், 16 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
K13 Turbo சீரிஸின் விலை மற்றும் உலகளாவிய வெளியீடு தொடர்பான அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனாலும், வெப்பக் கட்டுப்பாட்டு தொழில்நுட்பம், அதிக செயல்திறன் மற்றும் வசதிகள் கொண்டிருக்கும் இந்த மாடல்கள் பலரது கவனத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.