5 நாட்கள் பிறகு ஊட்டி மலை ரயில் சேவை இன்று தொடக்கம்

Ooty Hill Train service starts today after 5 days

குன்னூர், அக்டோபர் 24:

குன்னூரில் பெய்த கனமழையால் சேதமடைந்த மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் சேவை இடைநிறுத்தத்திற்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகளும் உள்ளூர்வாசிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 18-ஆம் தேதி இரவு கனமழை பெய்தது. இதனால் குன்னூர் முதல் ரன்னிமேடு வரை மலை ரயில் பாதையில் 16 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. மேலும் பல இடங்களில் மரங்களும் கற்களும் தண்டவாளத்தின் மீது விழுந்தன. இதனால் தண்டவாளங்கள் கடுமையாக சேதமடைந்ததால், மேட்டு பாளையம்–ஊட்டி ரயில் சேவை கடந்த 5 நாட்களாக ரத்து செய்யப்பட்டது.

இதனையடுத்து, ரயில்வே துறையினர் விரைவான சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டனர். பெருமளவில் மண் மற்றும் பாறைகள் அகற்றப்பட்டு, பாதை சீரமைக்கப்பட்டது. பாதுகாப்பு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, இன்று காலை சேவை மீண்டும் இயக்கத்துக்குத் தயாரானது.

இதன்படி, இன்று காலை மேட்டுப்பாளையம் நிலையத்தில் இருந்து ஊட்டி நோக்கி மலை ரயில் புறப்பட்ட நிலையில் வழியில் குன்னூர், லவுடேலா உள்ளிட்ட நிலையங்களில் நிறுத்தங்களுடன் ரயில் இயக்கப்பட்டது. பயணிகள் இயற்கையின் பசுமையையும் மலை அழகையும் ரசித்தபடி பயணம் செய்தனர்.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் தெரிவித்ததாவது, மலைப் பாதையில் இன்னும் சில இடங்களில் நிலச்சரிவு சாத்தியம் உள்ளதால், ரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்படுகின்றன. பயணிகள் பாதுகாப்பே எங்களின் முதன்மை நோக்கம்,” என்றனர்.

5 நாட்களுக்கு பின்னர் மலை ரயில் மீண்டும் புறப்படுவதால், நீலகிரி மாவட்டம் முழுவதும் பண்டிகை சூழல் நிலவுகிறது. சுற்றுலா தொழிலும் மீண்டும் செழிப்படைந்துள்ளது.

Related posts

நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!

NDA கூட்டணியில் ராமதாசை சேர்க்க 3 நிபந்தனைகள் விதித்த அன்புமணி

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை