அதிமுகவை ஒன்றிணைத்தால் மட்டுமே மீண்டும் வெற்றி பெற முடியும் – ஓபிஎஸ்

Only by uniting with AIADMK can we win again – OPS

சென்னை, செப்டம்பர் 05:

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை 10 நாட்களுக்குள் மீண்டும் கட்சியில் ஒருங்கிணைக்க வேண்டும் என்று கட்சித் தலைமைக்காகக் காலக்கெடு விதித்தது தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்தார்.

பெரியகுளத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவின் ஒருங்கிணைப்பே வெற்றி பெறுவதற்கான முக்கியக் காரணம் என்றும், அந்தப் பயணத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடுத்துள்ள நடவடிக்கைகள் கட்சிக்கே பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறினார்.

ஓ. பன்னீர்செல்வம் பேசியதாவது: “எம்ஜிஆர் இயக்கத்தை தொடங்கி வளர்த்த முதல் காலத்திலிருந்து அதிமுகவுக்காக செயல்பட்டு வருகிறார் செங்கோட்டையன். கட்சியில் ஏற்பட்ட பல்வேறு உள்ளக சூறாவளி, சுனாமி காலங்களில் மிகவும் கடுமையாக இருந்தாலும், அவர் அனைத்து உறுப்பினர்களையும் ஒருமையாக்கி இயக்கத்தை வலுப்படுத்த முயற்சி செய்தவர். அவர் எடுத்துள்ள நடவடிக்கைகளை கட்சி மட்டுமல்லாமல் அனைவரும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும். அதனால் மட்டுமே தமிழகத்தில் அதிமுக மீண்டும் வலுவடையும் மற்றும் வெற்றி பெறும். அவரின் எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள்.”

மேலும், அதிமுக சக்திகள் பிரிந்திருந்தால் வெற்றி பெற முடியாது என்ற சூழல் உள்ளது. கட்சி பிரிந்ததில் இருந்து பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறோம். 5 ஆண்டுகளாக வெற்றி பெற முடியாத சூழல் உள்ளது. அந்த நிலை மாற வேண்டுமென்றால் கட்சி ஒருங்கிணைய வேண்டும்.” எனத் தெரிவித்தார்.

Related posts

தேர்தலில் ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல..வெறும் 0 தான்: ஈபிஎஸ் விமர்சனம்

எச். ராஜாவைச் சந்தித்து நலம் விசாரித்த ஈபிஎஸ்!

முதியோருக்கு மாதம் ரூ.2,000; அதிமுக 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு!