டெல்லி, ஆகஸ்ட் 20:
எதிர்க்கட்சியினரின் அமளிகள் காரணமாக நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்றும் பீகார் வாக்காளர் திருத்த விவகாரத்தால் பாராளுமன்ற மக்களவை கூடியதும் அமளி ஏற்பட்டது. இதனால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
அதன் பின் கூடிய அவையில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடையைக் கட்டுப்படுத்தும் மசோதாவை தாக்கல் செய்தார். தொடர்ந்து, மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் பீகார் வாக்காளர் திருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால் மீண்டும் அவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டன.
இந்த சட்டம் ஒப்புதலுக்கு பின், ஆன்லைன் சூதாட்ட குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும். மேலும், சூதாட்ட செயலிகளை பிரபலங்கள் விளம்பரப்படுத்துவது தடுக்கப்பட்டு, அவை தடை செய்யப்படுவதாக உள்ளது.
இந்த சட்டம் அமலுக்கு வந்தால், இந்தியாவில் ஆன்லைன் சூதாட்டம் எதிரான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்பதாக அரசியல்வாதிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.