பெங்களூருக்கு புறப்பட்ட பேருந்தில் பயங்கர தீ விபத்து – 21 பேர் பலி

Breaking news about the Omni bus accident in Kurnool

ஆந்திரா, அக்டோபர் 24:

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு நோக்கி பயணித்த ஆம்னி பேருந்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு 42 பயணிகளுடன் பெங்களூரை நோக்கி புறப்பட்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து, இன்று அதிகாலை 3 மணியளவில் ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன டிக்கூர் பகுதியை கடந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது பைக் ஒன்றுடன் மீது பேருந்து மோதியது.

இதில் பேருந்தில் முன்பகுதி தீப்பற்றியது, சில வினாடிகளில் அது முழுப் பேருந்திற்கும் பரவியது. அச்சமயத்தில் பெரும்பாலான பயணிகள் உறங்கிக்கொண்டிருந்ததால், தப்ப முடியாமல் சிலர் பேருந்துக்குள் சிக்கிக் கொண்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் நீண்ட முயற்சிக்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த விபத்தில் 20 பயணிகள் உயிரிழந்தனர், பலரது உடல்கள் எரிந்து அடையாளமறிந்த நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் 12 பேர் காயமின்றி தப்பியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

மீதமுள்ள பிற பயணிகள் பலர் கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு கர்னூல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவர்கள் தெரிவித்ததாவது, சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், பலியாளர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அச்சப்படுகிறது.

மேலும் விபத்து குறித்து ஆந்திர போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனையடுத்து விபத்து குறித்து ஆந்திரா அரசு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

Related posts

திமுக – காங்கிரஸ் கூட்டணி குறித்த இறுதி முடிவு கார்கேவிடம் ஒப்படைப்பு

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

கேரளாவுக்கு ஒரு நீதி..மேற்கு வங்காளத்திற்கு ஒரு நீதியா? மம்தா பானர்ஜி ஆதங்கம்