ஈபிஎஸ் பற்றி டிடிவி தினகரன் பேசிய பழைய வீடியோ வைரல்

Old video of TTV speaking about EPS has gone viral.

சென்னை, ஜனவரி 21:

தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளது. கூட்டணி முடிவை அறிவித்த பின்னர், தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலைச் சந்தித்து தினகரன் தனது ஆதரவை உறுதிப்படுத்தினார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்று, வாழ்த்து தெரிவித்தார். இதனையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு டி.டி.வி.தினகரன் நன்றி தெரிவித்தார்.

இந்நிலையில், NDA கூட்டணியில் இருந்து அமமுக விலகியிருந்த சமயத்தில், “பழனிசாமியுடன் கூட்டணி போறதுக்கு பதில் தூக்கு மாட்டி தொங்கிட்டு போயிடலாம்” என்று டிடிவி தினகரன் பேசிய பழைய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts

தஞ்சாவூரில் தவெக தலைவர் பங்கேற்க உள்ள கூட்டத்திற்கு போலீசார் அனுமதி

ஈபிஎஸ்வுடன் தொகுதி பங்கீடு பேச்சு: தென்மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக

டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி!