சென்னை, அக்டோபர் 14:
தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில், வடகிழக்குப் பருவமழை பெரும்பாலும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அதிகமாக செருகப்படுகிறது. குறிப்பாக, வட மாவட்டங்களில் இது அதிக மழையாக மாறுவதாக அனுமானிக்கப்படுகிறது.
அந்தவகையில், இந்தாண்டுக்கான வடகிழக்குப் பருவமழை அடுத்த 48 மணி நேரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படடுள்ளதாவது, தென்மேற்குப் பருவமழை அக். 16-18 ஆகிய தேதிகளில் இந்திய பகுதிகளிலிருந்து முழுமையாக விலகுவதற்கான சாத்தியகூறுகள் உள்ளன.
எனவே அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கான சாத்தியகூறுகள் உள்ளதாக தெரிவித்துள்ளது.