பாமகவில் அன்புமணியை தவிர யாருக்கும் அதிகாரம் கிடையாது – பாலு

No one has power in PMK except Anbumani - Balu

அரியலூர், டிசம்பர் 24:

அரியலூரில் பா.ம.க. வழக்கறிஞர் பாலு நிருபர்களிடம் கூறியதாவது, கட்சி ஒழுங்கு நடவடிக்கையை மீறிய ஜி.கே.மணிக்கு விளக்கம் கேட்டு கடந்த 18-ந்தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. அவர் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு உரிய முடிவை அறிவிக்கும்.

சேலத்தில் வரும் 29-ந் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள கூட்டம் பா.ம.க.வின் அதிகாரப்பூர்வ பொதுக்குழு, செயற்குழு கூட்டம் அல்ல. கட்சியின் விதிகளின்படி, பொதுக்குழுவைக் கூட்டுவதற்கான அதிகாரம் தலைவர் அன்புமணி ராமதாசுக்கு மட்டுமே உள்ளது.

எனவே, அந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்த முடிவும் பா.ம.க.வைக் கட்டுப்படுத்தாது. இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளோம். அடுத்த ஆண்டு ஆகஸ்டு 26-ந்தேதி வரை அன்புமணி ராமதாஸ் தான் கட்சியின் தலைவர்.

கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தவே சிலர் இது போன்ற அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இதனை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம். தி.நகரில் உள்ள அலுவலகமே கட்சியின் தலைமை அலுவலகம், சின்னமும் எங்களிடமே உள்ளதாக அன்புமணி ஆதரவாளரும் வழக்கறிஞருமான பாலு தெரிவித்துள்ளார்.

Related posts

தஞ்சாவூரில் தவெக தலைவர் பங்கேற்க உள்ள கூட்டத்திற்கு போலீசார் அனுமதி

ஈபிஎஸ்வுடன் தொகுதி பங்கீடு பேச்சு: தென்மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக

டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி!