செங்கோட்டையன் குறித்து பதில் சொல்ல அவசியமில்லை- எடப்பாடி பழனிசாமி

No answer about Sengottaiyan - EPS

மதுரை, நவம்பர் 27:

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டபின், தனது கோபிசெட்டிப்பாளையம் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

இதன்பிறகு, சென்னை பட்டினம்பாக்கம் பகுதியில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வீட்டுக்கு செங்கோட்டையன் சென்றதாகவும், அங்கு பேச்சுவார்த்தை நடந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறு, இன்று சென்னை பனையூர் நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய்யின் முன்னிலையில் செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்துள்ளார். திருப்பூர் முன்னாள் எம்.பி. சத்யபாமா உட்பட செங்கோட்டையனின் ஆதரவாளர்களும் தவெகவில் இணைந்தனர்.

இந்த பின்னணியில், மதுரையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் தவெகவில் செங்கோட்டையன் இணைந்தது குறித்து கேள்விக்கப்பட்டது, அப்போது பதில் அளித்த ஈபிஎஸ் “அவர் அதிமுகவில் இல்லை. அதனால் அதற்கு பதில் சொல்ல அவசியமில்லை… நன்றி வணக்கம்..” என்று ஓரிரு வார்த்தைகளில் பதிலளித்துச் சென்றுவிட்டார். மற்றொரு இடத்தில் பேசும்போது, ‘தவெகவில் ஏன் இணைந்தார் என்று அவரிடம் கேளுங்கள், என்னை ஏன் கேட்கிறீர்கள்?’ என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது அதிமுகவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

Related posts

தஞ்சாவூரில் தவெக தலைவர் பங்கேற்க உள்ள கூட்டத்திற்கு போலீசார் அனுமதி

ஈபிஎஸ்வுடன் தொகுதி பங்கீடு பேச்சு: தென்மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக

டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி!