முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் நிதீஷ் குமார்!

Nitish Kumar resigns as Chief Minister!

பாட்னா, நவம்பர் 17:

பீகார் மாநில முதலமைச்சர் மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தின் (ஜேடியு) தலைவருமான நிதீஷ் குமார் தனது ராஜினாமா கடிதத்தை இன்று ஆளுநர் ஆரிஃப் முகமது கானிடம் வழங்கினார்.

சமீபத்தில் நடைபெற்ற பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் 202 தொகுதிகளை வென்று தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. இதில் பாஜக 89 இடங்களிலும், நிதீஷ் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் அரசு அமைக்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. நிதீஷ் குமார் புதிய காலக்கட்டத்திற்காக ராஜினாமா கடிதத்தை அளித்து, சட்டப்பேரவையை கலைக்க பரிந்துரைத்துள்ளார்.

பீகார் தலைநகர் பாட்னாவின் காந்தி மைதானத்தில் வருகிற நவம்பர் 20-ம் தேதி, வியாழக்கிழமை அன்று நிதீஷ் குமார் 10-வது முறையாக முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.

இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, நிதீஷ் குமார் தலைமையிலான தற்போதைய அமைச்சரவையின் இறுதி கூட்டம் இன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

கேரளாவுக்கு ஒரு நீதி..மேற்கு வங்காளத்திற்கு ஒரு நீதியா? மம்தா பானர்ஜி ஆதங்கம்

இலவசங்களுக்கு எதிரான வழக்கு: உடனே விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு