மதுரை, ஆகஸ்ட் 21:
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரையில் பிரமாண்ட வகையில் நடைபெற உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முயற்சியில், விஜய் தலைமையிலான தவெக கடந்த ஆண்டில் விழுப்புரம் மாவட்டத்தில் தனது முதல் மாநில மாநாட்டை நடத்தியது.
இரண்டாவது மாநாடு மதுரை–தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரபத்தி கிராமத்தில் 506 ஏக்கர் பரப்பில், 2 லட்சம் தொண்டர்களும் கலந்து கொள்ளும் வகையில், நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த மாநாட்டின் முக்கிய அம்சமாக, “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது” எனும் புதிய தீம் பாடல் இன்று வெளியிடப்படுகிறது. இந்த பாடலுக்கு பிரபல இசையமைப்பாளர் தமன் இசை அமைத்துள்ளார்; அவர் முன்பு தவெக கொடிப்பாடலுக்கும் இசை அமைத்து இருப்பார். பாடலில், 1967 மற்றும் 1977-ஆம் ஆண்டுகளில் திமுக மற்றும் அதிமுக அமைத்த ஆட்சி, சமூக மாற்றங்களுக்கு வழிகாட்டிய அரசியல் வரலாறு, விஜயின் தற்போதைய நம்பிக்கை, திடமான செயல்பாடுகள் குறித்து விவரிக்கும் உரை மற்றும் பேச்சும் இடம்பிடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.