தூத்துக்குடி, ஜூலை 4:
தூத்துக்குடி முதல் கன்னியாகுமரி வரை சுமார் 120 கிலோமீட்டர் நீளத்தில் விரைவில் புதிய தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட உள்ளது. தற்போதைய சாலையிலிருந்து தனித்தாக அமைக்கப்படும் இந்த நெடுஞ்சாலைக்காக சுமார் 600 எக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டியுள்ளது.
இதற்காக, தாசில்தார்கள் நியமிக்கப்பட்டு, எந்தெந்த சர்வே எண்களில் உள்ள நிலங்கள் வழியாக புதிய சாலை அமைக்கப்பட உள்ளது என்பது குறித்து ஆய்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வு முடிவடைந்ததும், நிலம் கையகப்படுத்தும் பணிகள் துவங்கி, சாலை கட்டுமான பணிகள் விரைவில் முன்னெடுக்கப்படும்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது, இந்த புதிய நெடுஞ்சாலை தென்மாவட்டங்களில் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் மட்டுமல்லாமல், சுற்றுலா வளர்ச்சிக்கும் பெரும் உதவியாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.