சென்னை, நவம்பர் 19:
வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி அடுத்த இரண்டு நாட்களில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்-கிழக்கில் உருவாகும் இந்த புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுவடையும் எனக் கூறப்பட்டுள்ளது.
நவம்பர் 22-ல் வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, நவம்பர் 24-ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காற்றழுத்தத் தாழ்வு காரணமாக, கடலோரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நவம்பர் 21, 22-ஆம் தேதி மிகக்கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
முக்கியமாக, கடலோர காவேரி படுகை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.