சென்னை, அக்டோபர் 28:
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக செயல்படும் நடிகர் விஜய், கட்சியின் அன்றாட நிர்வாகச் செயல்பாடுகளை மேலும் ஒருங்கிணைக்க புதிய நிர்வாகக் குழுவை அமைத்துள்ளதாக அறிவித்துள்ளார்.
தவெக அமைப்பு விரிவடையும் நிலையில், அதன் அனைத்து பிரிவுகளின் செயல்பாடுகளும் ஒருங்கிணைந்த முறையில் நடைபெற வேண்டும் என்பதற்காக இந்த நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய குழு கட்சியின் உள் பணிகள், நிர்வாக முடிவுகள், உறுப்பினர் சேர்க்கை மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புச் செயல்பாடுகளை மேற்பார்வையிடும் என்று அறியப்படுகிறது.
விஜய் தலைமையில் கடந்த சில மாதங்களாக கட்சியின் அமைப்புசார் வளர்ச்சி தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த புதிய குழுவின் உருவாக்கம் தவெக அரசியல் இயக்கத்திற்கு முக்கியமான திருப்பமாகக் கருதப்படுகிறது.
இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
என். ஆனந்த், பொதுச்செயலாளர்
ஆதவ் அர்ஜுனா, தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர்
மருத்துவர் கே.ஜி. அருண்ராஜ், கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர்
சிடிஆர் நிர்மல் குமார், இணைப் பொதுச்செயலாளர்
ஏ. ராஜ்மோகன், துணைப் பொதுச்செயலாளர், பெரம்பலூர் மாவட்டம்
சி. விஜயலட்சுமி, துணைப் பொதுச்செயலாளர், நாமக்கல் மாவட்டம்
ஏ. ராஜசேகர், தலைமை நிலையச் செயலாளர் கடலூர் மாவட்டம்
எம். அருள் பிரகாசம் துணைப் பொதுச்செயலாளர், சென்னை மாவட்டம்
மற்றும் பல மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் எனது வழிகாட்டுதலின்படி இயங்கும் இந்தப் புதிய நிர்வாகக் குழுவிற்குக் கழகத்தின் பொறுப்பாளர்கள். தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என விஜய் தெரிவித்துள்ளார்.