நேபாளம், செப்டம்பர் 09:
நேபாளத்தில் ஊழல் மற்றும் பொருளாதார சீரழிவுக்கு எதிரான மக்கள் போராட்டம் வலுவடைந்தன் காரணமாக அந்நாட்டின் பிரதமர் கே.பி. சர்மா ஓலி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சமீபத்தில், ‘யூடியூப்’, ‘இன்ஸ்டாகிராம்’, ‘ஃபேஸ்புக்’ உள்ளிட்ட 26 சமூக வலைதள செயலிகளுக்கு நாட்டில் தடையிடப்பட்டதற்கு எதிராக இளைஞர்கள் போராட்டங்கள் நடத்தியது, அரசு எதிராக பரபரப்பான இயக்கமாக மாறியது.
நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மற்றும் நேபாள காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி ஆட்சியை நடத்தி வந்த நிலையில், அரசில் பரவியுள்ள ஊழல் மற்றும் பொருளாதார சீரழிவுக்கான நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் கடந்த சில நாட்களில் வன்முறையாக மாறியது. இதனால் உள்துறை அமைச்சரும் விவசாயத் துறை அமைச்சரும் முன்பு பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டம், ஊழல் மற்றும் பொருளாதார நெருக்கடியை எதிர்த்து செவ்வாயன்றும் தொடர்ந்துள்ளது. கே.பி. சர்மா ஓலி தலைமையிலான அரசு பல துறைகளிலும் ஊழல் இருக்கின்றது என்ற குற்றச்சாட்டுகளோடும், இந்த உரிமைகள் மீறல் மற்றும் எதிர்ப்புக்கு காரணமாக இருந்தது.