திருநெல்வேலியில் ஐடி ஊழியர் கவின்செல்வா ஆணவக் கொலை சம்பவத்தில், கொலையாளி சுர்ஜித் பெற்றோர் இருவரும் காவல் உதவி ஆய்வாளர்கள் பணியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதன்பிறகு, காவல் உதவி ஆய்வாளர்களாக பணியாற்றிய சுர்ஜித்தின் பெற்றோர் சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோருக்கு பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, தமிழ்நாடு சிறப்பு காவல் படை டிஐஜி விஜயலட்சுமி அதிகாரபூர்வமாக ஒழுங்கு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், திருநெல்வேலியில் இடம்பெற்ற இந்த கொலை வழக்கில் சுர்ஜித் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவரது பெற்றோரும் இரண்டாம் மற்றும் மூன்றாம் குற்றவாளிகளாக உள்ளனர்.
இந்நிலையில், சென்னை சேர்ந்த ஐடி ஊழியர் கவின், ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில்,அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் தூத்துக்குடி மாவட்டம் முக்காணியில் சாலை மறியலில் நேற்று ஈடுபட்டிருந்தனர். அவரது உடலை இரண்டாவது நாளாக இன்றும் வாங்க மறுத்து வருகிறார்கள்.