நெல்லை ஆணவக் கொலை: குற்றவாளி சுர்ஜித் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Nellai honor killing case transferred to CBCID

திருநெல்வேலி, ஜூலை 30:

மென்பொறியாளர் கவின் ஆணவக் கொலை வழக்கில், பிரதான குற்றவாளியான சுர்ஜித் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த கவின் (24), சென்னையில் மென்பொறியாளராக பணியாற்றி வந்தவர். நடுத்தர வகுப்பைச் சேர்ந்த இவர், கடந்த 27-ம் தேதி சுர்ஜித் என்பவரால் வெட்டி படுகொலை செய்யப்படார். கொலைக்கு பிறகு, சுர்ஜித் நேராக திருநெல்வேலி தாலுகா காவல் நிலையத்தில் சரணடைந்தார். போலீசார் சம்பவ இடத்தில் சென்று, கவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக முதற்கட்ட விசாரணையில், சுர்ஜித்தின் பெற்றோர் – காவல் உதவி ஆய்வாளர்கள் சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர்களும் குற்றவாளிகளாகப் First Information Report-இல் சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, இரண்டு பெற்றோர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், காவல் துறையினரால் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், கவின் சகோதரர் மற்றும் அவரது உறவினர்களிடம் 4 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதையடுத்து கவின் உடலை வாங்க 3 ஆவது நாளாக அவரது உறவினர்கள் மறுத்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆணவக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுர்ஜித் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரது பெற்றோர்களான காவல் உதவி ஆய்வாளர்கள் இரண்டு பேரும் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!

NDA கூட்டணியில் ராமதாசை சேர்க்க 3 நிபந்தனைகள் விதித்த அன்புமணி

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை