கோவை, செப்டம்பர் 06:
தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இருக்க வேண்டும் என்று விரும்பியதாக டிடிவி தினகரனின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ளார்.
நயினர் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இருக்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம். ஓபிஎஸ், டிடிவி இருவரும் சொல்லி வைத்துக்கொண்டு குற்றம் சாட்டுகிறார்களா என தெரியவில்லை. அமமுகத்துக்கு நாங்கள் ‘துக்கடா கட்சி’ என்று நினைக்கவில்லை. அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை. நான் எப்போதும் ஆணவமாக நடல்வதில்லை.”
அதிமுக ஒன்றிணைந்தால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும் என்பதும், இந்த கூட்டணி வெற்றிக்கு உகந்தது என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், “செங்கோட்டையனின் கருத்து என்பது அவர்களது உட்கட்சி விவகாரம். டிடிவி தினகரன் அமித் ஷாவை தேவையில்லாமல் வம்பிற்கு இழுத்துள்ளார் டிடிவி தினகரன். இதற்கு நான் பொறுப்பேற்க முடியாது”என்றார்.