டெல்லிக்கு புறப்பட்டார் நயினார் நாகேந்திரன்

Nainar Nagendran has departed for Delhi

சென்னை, டிசம்பர் 13:

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

நேற்று முன்தினம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேற்று முன்தினம் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசிய நிலையில் இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

டெல்லிக்கு செல்லும் நயினார் நாகேந்திரன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பா.ஜ.க. மேலிட தலைவர்களை சந்தித்து தொகுதி பங்கீடு மற்றும் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைப்பது குறித்து விவாதிப்பார் என்று கூறப்படுகிறது. மேலும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அஞ்சலை தலை வெளியீட்டு விழாவிலும் நயினார் நாகேந்திரன் பங்கேற்கிறார்.

Related posts

தஞ்சாவூரில் தவெக தலைவர் பங்கேற்க உள்ள கூட்டத்திற்கு போலீசார் அனுமதி

ஈபிஎஸ்வுடன் தொகுதி பங்கீடு பேச்சு: தென்மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக

டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி!