மூப்பனார் நினைவுநாள்: NDA கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரியாதை

Moopanar's memorial day: NDA party leaders pay tributes

சென்னை, ஆகஸ்ட் 30:

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கம் பின்புறம் அமைந்துள்ள முப்பனாரின் நினைவிடத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இன்று நடைபெற்ற மரியாதை நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, ரவி பச்சமுத்து, தேமுதிக துணை பொதுசெயலாளர் எல்.கே. சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய தமிழிசை சௌந்தரராஜன், மூப்பனார் பிரதமர் ஆக வேண்டும் என்பதில் எதிர்ப்புகள் இருந்ததாகவும், அப்துல்காலம் பிரதமர் ஆக வேண்டும் என்பதுக்கு தடைகள் இருந்ததாகவும், தற்போது சிபி ராதாகிருஷ்ணன் வருகிற நிலைமையில் திமுக ஆதரவு இல்லாமல் தமிழர்களுக்கு எதிரான நிலைகள் உருவாகி உள்ளதை அவர் குற்றிட்டார்.

தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, மூப்பனாரை தன்நலமற்ற தலைவராகவும், காமராஜர் வழியில் அரசியல் பாதையை அமைத்து, தூய்மையான அரசியல் தலைவராக வலம் வந்தவர் என நினைவு கூர்ந்தார்.

Related posts

தேர்தலில் ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல..வெறும் 0 தான்: ஈபிஎஸ் விமர்சனம்

எச். ராஜாவைச் சந்தித்து நலம் விசாரித்த ஈபிஎஸ்!

முதியோருக்கு மாதம் ரூ.2,000; அதிமுக 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு!