கரூர் கூட்டநெரிசலில் உயிரிழந்தோருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல்

MK Stalin consoles those who died in Karur stampede

கரூர், செப்டம்பர் 29:

கரூர் மாவட்டம் வேலுசாமிபுரம் பகுதியில், தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சம்பவத்தின் பின்னர், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார் . மேலும் உடனடியாக விமானம் மூலம் திருச்சிக்குச் சென்றவும், அங்கிருந்து காரில் கரூர் சென்றடைந்தார்.

அரசு மருத்துவமனைக்கு சென்ற கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு உயிரிழந்தோர் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதனுடன், காயமடைந்தவர்களின் நிலவரத்தை நேரில் பார்வையிட்டு, அவர்களையும் சந்தித்தார்.

இதுகுறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது,”இரவு முழுவதும் உயிரிழந்தோரின் குடும்பத்தினர் வெளியிட்டிருந்த கண்ணீர் மற்றும் துக்கம் எனது நெஞ்சில் எப்போதும் நிலைத்து உள்ளது” என கூறி, மக்களின் துயரத்தில் கீழாமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts

தேர்தலில் ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல..வெறும் 0 தான்: ஈபிஎஸ் விமர்சனம்

எச். ராஜாவைச் சந்தித்து நலம் விசாரித்த ஈபிஎஸ்!

முதியோருக்கு மாதம் ரூ.2,000; அதிமுக 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு!