அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள் ஆலோசனை

How much is department-wise allocation in budget?

சென்னை, டிசம்பர் 31:

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்ய வேண்டும், தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றுவோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 6-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, அன்பில் மகேஸ், தலைமைச் செயலாளர், நிதிச் செயலர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

அதற்கு முன்னதாக ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக ககன்தீப் சிங் தலைமையிலான குழு முதலமைச்சரிடம் நேற்று இறுதி அறிக்கையை சமர்ப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

NDA கூட்டணியில் ராமதாசை சேர்க்க 3 நிபந்தனைகள் விதித்த அன்புமணி

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை

கட்சி நிர்வாகிகளுடன் ராமதாஸ் முக்கிய ஆலோசனை!