பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து

Minister Anbil Mahesh congratulates students writing public exams

சென்னை, மார்ச் 02:

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் பாடத்திட்டங்களை பின்பற்றும் பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்குகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 7,545 பள்ளிகளில் இருந்து 7 லட்சத்து 99 ஆயிரத்து 692 மாணவ-மாணவிகள் இந்தத் தேர்வை எழுத உள்ளனர். இதுதவிர, தனித்தேர்வர்களாக 27 ஆயிரத்து 783 பேர் எழுதுகின்றனர். அந்த வகையில் மொத்தம் 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 பேர் எழுத உள்ளனர்.

தேர்வு எழுதும் மாணவர்கள் பதற்றமின்றி தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் அறிவுறுத்தல்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று பொதுத் தேர்வு எழுதவுள்ள 12ஆம் வகுப்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் அன்பும் வாழ்த்துகளும். அன்பு மாணவர்களே பதற்றம் இல்லாமல் சந்தோஷமா தேர்வு அறைக்கு வாங்க. மகிழ்ச்சியாக நம்பிக்கையுடன் தேர்வு எழுதுங்கள். உங்களுக்கு துணையாக நாங்கள் இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Related posts

ஈபிஎஸ்வுடன் தொகுதி பங்கீடு பேச்சு: தென்மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக

டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி!

மதுரைக்கு வந்த பிரதமர் பொய்யை அவிழ்த்துவிட்டிருக்கிறார்: மு.க.ஸ்டாலின்