ஜம்மு, ஆகஸ்ட் 9:
ஜம்மு – காஷ்மீரின் வனப்பகுதியில், அகால் தேவ்சார் பகுதியில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்புப் படைகள் கடந்த 9 நாட்களாக தீவிர செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு முதல் பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 4 ராணுவ வீரர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு உள்ளனர். உயிரிழந்தவர்கள் ராஷ்டிரியா ரைபிள்ஸ் படையின் கான்ஸ்டேபிள் ஹர்மிந்தர் சிங் மற்றும் லான்ஸ் நாயக் ப்ரீத்பால் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் இந்த நடவடிக்கைகளில் ருத்ரா ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள் மற்றும் துணை ராணுவ படைகள் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.