7
டெல்லி, அரியானா மாநிலங்களில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். அரியானா மாநிலம் குருவாராவை மையமாக கொண்டு இன்று காலை நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, டெல்லி, அரியானா, காசியாபாத், மயூர்விகார் உள்ளிட்ட பல இடங்களில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணியளவில் ஏற்பட்ட இந்த நில அதிர்வால் பொதுமக்கள் பீதியடைந்தனர். இதையடுத்து, வீடுகளிலிருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். ரிக்டர் அளவு கோலில் 4 .4 ஆக இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக, தேசிய பேரிடர் மீட்பு அமைப்பு ஏற்பட்டது. இருப்பினும், இந்த நில அதிர்வால் கட்டடங்களுக்கு எந்த வித பாதிப்பு இல்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.