ஒரே ஆண்டில் 4-வது முறை நிரம்பிய மேட்டூர் அணை

1 lakh cubic feet of water released from Mettur – Flood alert for 11 districts

சேலம், ஜூலை 26:

மேட்டூர் அணை இந்த ஆண்டு 4-வது முறையாக இன்று தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியுள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய இரு அணைகளில் இருந்து காவிரி ஆற்றினூடாக அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டதால், அணைக் கொள்ளளவு மிக வேகமாக எட்டப்பட்டுள்ளது.

முன்னதாக ஜூன் 29-ஆம் தேதி முதல் முறையாக 120 அடி நிரம்பிய மேட்டூர் அணை, அதன் பின்னர் 5-ந்தேதி, 20-ந்தேதி ஆகிய இரண்டு முறை தொடர்ச்சியாக நிரம்பியது. தற்போது மீண்டும் அணையின் நீர்மட்டம் அதிகரித்து, இன்று காலை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி, அணைக்கு வினாடிக்கு 25,400 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து, காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 25,000 கனஅடி திறக்கப்பட்டு வருகிறது. மேலும், நீர்மின் நிலையங்கள் வழியாக 18,000 கனஅடி மற்றும் உபரி நீர் போக்கி வழியாக 7,000 கனஅடி திறக்கப்படுகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதமும் தண்ணீர் விடப்படுகிறது.

மேட்டூர் அணையின் பல கண் மதகுகள் வழியாக அதிக அளவு தண்ணீர் திறக்கப்படுவதால், காவிரி கரையோர பகுதிகளிலுள்ள மக்களுக்கு அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். மக்கள் அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இது தமிழக விவசாயிகளுக்கும் காவிரி கரையோர மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!

NDA கூட்டணியில் ராமதாசை சேர்க்க 3 நிபந்தனைகள் விதித்த அன்புமணி

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை