டெல்லி முதலமைச்சரை தாக்கியவர் கைது

Man arrested for attacking Delhi Chief Minister

டெல்லி, ஆகஸ்ட் 20:

டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது காலை பொதுமக்களை சந்தித்துக் கொண்டிருந்த போது, கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் முதலமைச்சரை கடுமையாக தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதலை ஏற்படுத்திய குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த 35 வயதான நபரான, ராஜேஷ் கிம்ஜி சகாரியா என்பவரை போலீசார் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதில் முதலமைச்சர் ரேகா குப்தாவிற்கு முகம் மற்றும் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டது

இந்த சம்பவம் டெல்லியில் உள்ள ரேகாவின் வீட்டிற்கு அருகே நடைபெற்றது. ரேகா குப்தா பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்த போது இந்த தாக்குதல் நடந்தாக கூறப்படுகிறது.

Related posts

தேர்தலில் ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல..வெறும் 0 தான்: ஈபிஎஸ் விமர்சனம்

எச். ராஜாவைச் சந்தித்து நலம் விசாரித்த ஈபிஎஸ்!

முதியோருக்கு மாதம் ரூ.2,000; அதிமுக 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு!