மல்லிகார்ஜுன கார்கே மருத்துவமனையில் அனுமதி

Mallikarjuna Kharge admitted to hospital

பெங்களூரு , அக்டோபர் 01:

காங்கிரஸ் கட்சியின் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தகவலை உறுதி செய்து கார்கேவின் மகனும் கர்நாடக அமைச்சருமான பிரியங்க் கார்கே தெரிவித்ததாவது: “கார்கேவுக்கு இதயத்தில் பேஸ்மேக்கர் நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். திட்டமிடப்பட்ட அறுவைச் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நிலையாகவும் நலமுடனும் இருக்கிறார்.” எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, வருகின்ற அக்டோபர் 7 ஆம் தேதி நாகலாந்தில் மிகப்பெரிய அளவில் காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடு செய்திருக்கும் பொதுக் கூட்டத்தில் கார்கே கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளார்.

தற்போதைய அறுவைச் சிகிச்சையின் காரணமாக, அந்த பொதுக் கூட்டத்தில் கார்கே கலந்துகொள்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே கருதப்படுகிறது.

Related posts

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

கேரளாவுக்கு ஒரு நீதி..மேற்கு வங்காளத்திற்கு ஒரு நீதியா? மம்தா பானர்ஜி ஆதங்கம்

இலவசங்களுக்கு எதிரான வழக்கு: உடனே விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு